நாளை ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள்ளது. இந்நிலையில் ரஜினி தான் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தான் கட்சி தொடங்க போவதில்லை என்றும் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம் என்றும் கூறி அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நாளை பிப்ரவரி 26-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்த நிலையில் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.