டாப் 10 ஹாஷ்டாக்கில் 6 இடங்களை ரஜினியின் ஹாஷ்டாக் கைப்பற்றியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இன்று சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகர் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை விட ட்விட்டரில் எப்பொழுதும் hashtag போட்டி என்பது நிலவும். அதேபோல் இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் ரஜினி முதல் இடத்தை பிடிப்பார் என்பது எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கும் ஒரு படி மேல் சென்று டாப்-10 ஹாஷ்டாக்கில் 6 இடங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைப்பற்றியுள்ளார். இது அவரது ரசிகர்களால் தற்போது பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது.