ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மாவட்டச் செயலாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகின்றது. அரசியல் குறித்த விவரங்கள் , செய்திகளை தலைமை அறிவுறுத்த இன்றி வெளியே சொல்லக் கூடாது என ரஜினி எச்சரித்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் மற்ற கட்சியினர் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தால் ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்திய தாகவும் சொல்லப்படுகின்றது.