அண்ணாத்த திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதனையடுத்து, இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.