Categories
அரசியல்

விஸ்வாசம் அற்றவர்கள் ”ரஜினியை பயன்படுத்திட்டாங்க” காங்கிரஸ் மீது பாயும் கராத்தே ….!!

திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு  ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க நான் என்ன பண்றது நானே ஒரு முதலமைச்சராக தகுதி பெற்றவன் வேற வழி இல்லாம ஸ்டாலினை பற்றி பேசிவிட்டேன்.

நீங்க முதலமைச்சர் ஆனா எனக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்துடுங்க அப்படி கேப்பாரு திருநாவுக்கரசர். காமராஜர் அரங்கத்தில் அவர் பேசும் நிகழ்ச்சியில் அங்கு பங்கேற்ற நடிகர் ரஜினியின் பெயரை மறந்து விட்டார். நான் ஞாபகப்படுத்தினேன். என்னங்க முதல் அரசியல் நண்பர் அண்ணன் ரஜினி ன்னு சொன்னீங்க என்று கேட்டேன். திருநாவுக்கரசர் எங்கேயும் விசுவாசமா இருந்தது கிடையாது. அவர் பழகுவதற்கு இனிமையானவர். அதிகாரத்துக்கு வந்துட்டாருன்னா உடனே அவர்  வேலையை காட்டுவாரு என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

Categories

Tech |