Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிராக திராவிட விடுதலை கழகம் போராட்டம்….

சென்னையில் பல்வேறு இடங்களில் ரஜினி பெரியாருக்கு எதிராக பேசிய கருத்துக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது அந்த வகையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் செம்மொழிப் பூங்கா அருகில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் செம்மொழிப் பூங்காவில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தை முற்றுகையிடும்  போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். செம்மொழிப் பூங்காவில் இருந்து அவர்கள் ரஜினியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போது செம்மொழிப் பூங்காவில் காவல்துறையினர் அவர்களை மறித்தனர்.

இந்த சூழலில் உமாபதி செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, ரஜினி திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் அவர் மறுப்பு தெரிவிக்காமல் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் போராட்டங்கள் தொடரும். அடுத்தடுத்த கட்டங்களில் அவரது நடவடிக்கைகள் அனைத்துமே நாங்கள் முடக்குவோம் அவர் எங்கு சென்றாலும் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |