பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்து கூறியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி தெரிவித்ததை எதிர்த்து சமூக வலைதளத்தில் பல்வேறு ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்டவை வலியுறுத்தின.
மேலும் ரஜினிக்கு எதிராக பல்வேறு காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டு போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகுந்த ஆதாரத்துடன் தன்னுடைய கருத்து விளக்கமளித்தார் .
அதில் , தாம் ஊடகங்களில் வந்ததையே கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இல்லாத விஷயம் ஒன்றும் நான் சொல்ல, கற்பனையாக ஒன்னும் சொல்லல , மத்தவங்க சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன். இது சர்ச்சையாகி இருக்கிறது , இதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும் , வருத்தம் தெரிவிக்கனும் என்று சொல்றாங்க. சாரி நான் மன்னிப்பு கேட்க முடியாது வருத்தம் தெரிவிக்க முடியாது என்று ரஜினி அதிரடியாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்த செய்தியாளர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ரஜினியின் பேட்டிக்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக #சூப்பர்சங்கிரஜினி , #ரஜினிஒருமெண்டல் என்ற ஹாஷ்டகை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதில் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போல #மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினி ஆதரவு ஹாஷ்டாக் இந்திய ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.