ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் 4 ஆவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ”அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதனிடையே, இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘ சாரா காற்றே’, ‘மருதாணி’ என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 4 வது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.