‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாட்டில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் அமெரிக்காவில் 414 தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இதன் தெலுங்கு டப்பிங் ஆன ‘பெத்தன்னா’ 261 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாகவும், சிங்கப்பூரில் 23 தியேட்டர்களில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலவரம் சில நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.