ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தர்பார் படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.போஸ்டரை வெளியானதையடுத்து #darbarpongal என்ற ஹோஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Happy Deepavali 🔥@rajinikanth @ARMurugadoss @santoshsivan @anirudhofficial @sreekar_prasad
#Darbar #darbarpongal pic.twitter.com/JYouHozoho— Lyca Productions (@LycaProductions) October 26, 2019