Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பேரன் லிங்கா கையில் காயம்… ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..!!!!

லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர்.

இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் ரஜினி பேரன்களான லிங்கா மற்றும் யாத்ராவுடன் கேளம்பாக்கத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தங்கி இருக்கின்றார்.

இது குறித்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படத்தில் தனுஷின் மகன் லிங்கா கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழை மற்றும் புயல் காரணமாக ரஜினி ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |