Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் திடீர் சந்திப்பு.. கலாய்த்த வைகோ – என்ன இப்படி சொல்லிட்டாரு?

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு,  தமிழக அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்த சந்திப்பு முடிந்து, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பதை சொல்ல முடியாது ? என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் நடிகர் ரஜினிகாந்த் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரோ அல்லது பாஜக ஆதரவாக வேட்பாளராக களமிறங்குவாரோ என்றெல்லாம் யூகங்களான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏனென்றால் இந்த பேட்டியின் போதே அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். அதனால் அவர் தனியாக அரசியல் கட்சி தொடங்கி  அரசியலுக்கு வர மாட்டார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோடு நல்ல ஒத்துழைப்பில்  இருக்கின்றார்.

எனவே பாரத ஜனதா கட்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்வார் அல்லது பாரதிய ஜனதா கட்சி சார்பாக வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று உறுதி செய்யாத செய்தியை ரஜினி  ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் – ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியல, யாருக்கும் புரியவில்லை. ஏனென்றால் ஒருநாள் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார், மறுநாள் நான் உறுப்பினர் சேர்க்க சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார், பிறகு எல்லாரையும் வர சொல்கிறார், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எல்லோரும் வருகிறார்கள். வந்த பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிட்டு, பால்கனியில் இருந்து கை காமித்து விட்டு சென்று விடுகிறார். அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கலாய்தார்.

Categories

Tech |