ரஜினியிடம் ஆதரவு கேட்காமல் அவரே தாமாக ஆதரவு கொடுப்பார் என்று நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது . இது குறித்த அறிவிப்பு நேற்று காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் ,எங்களின் கட்சி மக்களிடம் கூட்டணி வைத்திருக்கிறது. மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் பலமான கூட்டணி . இதுதான் வெற்றிக் கூட்டணி. எங்களுக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் நிச்சயம், தமிழகத்தில் ஒளி பாய்ச்சும் விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம் என்று தெரிவித்தார் .மேலும் ரஜினியின் ஆதரவு குறித்து தெரிவிக்கையில் , ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. தாமாகவே கொடுப்பது. அப்படி கேட்காமல், தாமாகவே கொடுப்பது , ஆதரவை பெறுவதும் பெரியவிஷயம். ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறோம் என்று நடிகர் கமல் தெரிவித்தார்.