தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். இப்படத்தின் கடைப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருவதால் மிகுந்த கட்டுப்பாடு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் அருகில் நடந்து வருகிறது.
அங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்தை காணும் ஆர்வத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். படப்பிடிப்பு அரங்கில் இருந்து வெளியே வரும் ரஜினியை முற்றுகையிட்டு வாழ்த்து கோஷங்களை எழுப்புகின்றனர். அவர்களை பார்த்து ரஜினி கையைசைத்தார். கூட்டத்தினரை தாண்டி காருக்குள் சில ரஜினிக்கு சிரமமாக இருந்தது. படபிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தினமும் அதிக ரசிகர்கள் திரளுவதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பை வேறு இடத்துக்கு மாற்றலாம் என்ற படக் குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.