Categories
இந்திய சினிமா சினிமா

ரஜினியை பிரபாஸ் மிஞ்சி விட்டாரா….? வெளியான தகவலால் எழுந்த சந்தேகம்…!!

நடிகர் பிரபாஸ் தனது 21 வது படத்திற்கு சுமார் 70 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த் தான் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லிக் கொண்டிருந்தனர். இவர் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் ‘மாஸ்டர்’ படத்தில் விஜயின் சம்பளம் 50 கோடி என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இத்தகவல் உறுதியானதா எஎன்பது தெரியவில்லை. ‘மாஸ்டர்’ படம் விஜய்யின் உறவினர் தயாரிக்கும் படம் என்பதால் அப்படி ஒரு கணக்கை காட்டி இருக்கிறார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். இருப்பினும் விஜய் ரஜினிகாந்தின் சம்பளத்தை கடக்கவில்லை.

இதற்கிடையில், நடிகர் பிரபாஸ் மகாநடி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 21 வது படத்திற்கு சுமார் 70 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து விற்கும் உரிமையிலும் அவருக்கு பாதி கொடுத்துவிட வேண்டுமாம். அதை எல்லாம் சேர்த்து பார்த்தால் 100 கோடி தாண்டும் என்கின்றனர். பிரபாஸுக்கு ஜோடியாக இப்படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதற்கு 20 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். அதேசமயம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் 5 கோடி ரூபாய் கேட்டதற்கு படக்குழு யோசிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி ரூபாய். அதில் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாகவே போய்விடும். இன் நிலையில் இவை அனைத்தும் படத்திற்காக சொல்லப்படும் பில்டப்பாக கூட இருக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

 

Categories

Tech |