நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது . இதையடுத்து நடிகர் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார் .
இந்நிலையில் மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி வருகிற மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது . சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளது. இதையடுத்து இறுதிகட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. மேலும் இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.