ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை காலமானார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவரது மனைவி நளினி உட்பட 7 பேர் 28 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை காலமானார்.