கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கல்லால் அடித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் கற்களால் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து நடிகர் ராஜ்கிரண் பதிவுசெய்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில்” எவ்வளவு கீழ்த்தரமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகின்றது.
தனது குழந்தைகள், மனைவி, குடும்பத்தினர் என யாரை பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் தான் படித்தது மக்களைக் காப்பாற்றவே என்ற ஒரே லட்சியத்துடன் சமூக பொறுப்புணர்ந்து தனது உயிரை பனையம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் கைமாறாக செய்வது இதைத்தான் என்றால்,
இஸ்லாமிய மதத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக வெறும் காய்ச்சலால் இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனது உடலை புதைக்க விடமாட்டோம் என அடாவடித்தனம் பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான் இந்நாட்டில் சட்டம் என்றால் மற்ற உலக நாடுகளின் பார்வையில் நமது நாடும் தேசமும் மிகவும் கேவலப்பட்டு தான் நிற்கவேண்டும்.
இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் மிகவும் ஈனப்பிறவிகள் ஆகவே கருதப்படுவர்” என குறிப்பிட்டிருந்தார். ராஜ்கிரணின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது