Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தனிக்குடித்தனம் போகணும்” மனைவி கூறியதால்…. ராஜ்குமார் எடுத்த முடிவு…!!

தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கூறியதால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர் ராஜ்குமார் (20). இவர் அப்பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோர் தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமார் மாணவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.

எனவே தனிக்குடித்தனம் போகலாம் என்று கணவரை வற்புறுத்தியுள்ளார். கொஞ்சம் நாட்கள் பொறுத்துக் கொண்டால், அப்புறம் தனியாக போகலாம் என்று மனைவிடம் ராஜ்குமார் கூறி வந்துள்ளார். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பது ராஜ்குமார் குடும்பத்திற்கும், அவரை வளர்த்த பாட்டிக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் கூறி வந்துள்ளார்.

இதனால் மனைவி பக்கம் பேசுவதா? அல்லது பாட்டி சொல்வதை கேட்பதா? என்ற குழப்பத்தின் உச்சத்துக்கே ராஜ்குமார் சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக ராஜ்குமார் யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி குடித்தனம் போகவேண்டும் என்று கூறியதால் ராஜ்குமார் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |