Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த தருணம் இந்தியா பிரான்ஸ் இடையே ஒரு உறவில் ஒரு மைல்கல் என்றும் குறிப்பிட்டார். பின்னர் விஜயதசமியில் போர் விமானத்திற்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தனம் இட்டு , தேங்காய் , பூ , பழங்களை வைத்து புனித கயிறு கட்டி பூஜை செய்தார். பூசைக்குப் பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்தில் பயணம் செய்தார். முதல் கட்டமாக 4 ரபேல் விமானங்கள் அடுத்த மாதமும் , 36 விமானங்களும் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |