இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அதிகாரி உட்பட மூன்று பீர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா – சீனா எல்லை பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தொடர்பாக முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். எல்லைப் பகுதியில் பதற்றத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எல்லைப் பகுதியில் பதற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் இந்த தாக்குதலால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகின்றது.