ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும் போது, ரஜினி பின்னால நீக்க ஏன் இருக்கீங்கன்னு சொல்றாங்க. அவர் பிஜேபி நான் அண்ணா திமுக. நாங்க அல்லயன்ஸ் தானே இது தெரியாம பேசிட்டு இருக்கீங்கள. S.V சேகர் சார் கிட்ட ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் அப்படின்னு சொன்னேன். அதற்க்கு ரஜினி வந்தா எப்படி ஜெயிப்பீங்க என்று கேட்டார். ஜெயிக்க வேண்டுமென்றால் பவர் இருக்க வேண்டும் , பணம் இருக்க வேண்டும் , மனிதாபிமானம் இருக்க வேண்டும் , எதிர்ப்பு சக்தி வேண்டும். இதுவெல்லாம் இருந்தால் கண்டிப்பாக வெற்றி தான் வரும்.
ரஜினி சார் வருவார் என்று நான் நம்பி சொல்லிக்கிட்டு இருக்கேன் எல்லாம் அவர் கையில தான் இருக்கு. ரஜினி சார் முடிவெடுக்க மாட்டாரா ? இந்த முறை சில முடிவு எடுப்பார் , இந்த முறை யோசிப்பார். நாட்டினுடைய பிரச்சனைகள் அப்படி இருக்கு. மீம்ஸ் எல்லாம் போடுவாங்க , சும்மா போட்டுகிட்டே தான் இருக்கணும். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ கமெண்ட் பண்றவன் உருப்பட முடியாது. நாம சைலண்டா நின்னுகிட்டு இருந்தா நாம தான் வெற்றி பெறுவோம் என்று ராதாரவி தெரிவித்தார்.