பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளரான ராஜு, அமீர் குடும்பத்தினருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சின்னத் திரையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ராஜு, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்மூலம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று அந்நிகழ்ச்சியின் வெற்றியாளரானார்.
எனவே, ராஜுவிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ராஜு, பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தளத்தில் வெளியானது.
https://www.instagram.com/p/CZJW6qfoNff/
அதில், அமீரும் அவரின் குடும்பத்தினரும் ராஜுவுடன், சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.