ராஜூ பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு டைட்டிலை வென்றார்.
இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பிக்பாஸ் கோப்பையை ஏந்திப் பிடித்து இருக்கும் புகைப்படத்தை ராஜூ வெளியிட்டுள்ளார். தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் நெல்சன் தற்போது ”பீஸ்ட்” படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.