Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு …..!!

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி முனியசாமி , தம்பிதுரை , GK.வாசன் போட்டியிட்டனர். அதே போல திமுக சார்பில்  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளரும் , தேர்தல் நடத்தும் அதிகாரியுமானான சீனிவாசன் , அதிமுக , திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.

Categories

Tech |