மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் , அவர் மீது ஏதேனும் வழக்கு இருக்கிறதா ? போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இதில் எம்எல்ஏவாக இருக்கக்கூடிய பெரியசாமி, திமுக எம்பி கனிமொழி உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனால் திமுக ராஜ்யசபா உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகிறது.ஏற்கனவே ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், வில்சன் ,சண்முகம் என 4 பேர் இருந்த நிலையில் புதிதாக 3 பேர் தேர்வாவதன் மூலம் ராஜ்யசபாவில் திமுகவின் பலம் 7ஆக உயர்கின்றது.