ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற இளவரசர் ஒருவருக்கு ராக்கி அனுப்பியுள்ளார்.
அதற்கு காரணம் குஜராத்தில் பகதூர்ஷாவின் ராஜ்ஜியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஹீமாயூனுக்கு இதை அவர் அனுப்பியிருந்தார். அதுவும் குறிப்பிட்ட பூர்ணிமா பௌர்ணமி அன்று அவர் அனுப்பியிருந்தார். அதிலிருந்து இளவரசி ராக்கி அனுப்பிய இடம் தற்போதைய குஜராத். அந்த இடத்தில் மட்டும் கொண்டாடப்பட்ட இந்த ரக்ஷபந்தன் நாளடைவில் இந்தியா முழுவதும் படிப்படிப்படியாக கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது இந்த ராக்கி என்ற பாரம்பரியமும், ரக்ஷாபந்தன் என்ற விழாவும் வடமாநிலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவி தென்பகுதிகளில் இருக்கக்கூடிய மாநில மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது முழு இந்திய நாடே இதனை கொண்டாடும் அளவிற்கு இந்த திருவிழா பிரசித்தி பெற்றுவிட்டது. இதற்கு காரணம் அன்புதான். அன்பு தானே எல்லாம் என்பதற்கு இணங்க அன்பை பரிமாறும் ஒரு விழாவாக இது இருப்பதால்தான் இந்தியா முழுவதும் இதனை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாக இது கருதப்படுகிறது.