படத்திலுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே படத்தின் ஷுட்டிங் இந்த மாதம் தொடங்கவுள்ளது.காதலுடன் தன்னைப் பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங் தோள்களைப் பின்னாலிருந்து அணைத்தவாறு அர்ஜுன் கபூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
1761ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை அடிப்படையாகக் கொண்டு அர்ஜுன் கபூர் நடித்துள்ள ‘பானிபட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அர்ஜுன் கபூரின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்த ஆண்டில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து ‘தீ தீ பியார் தீ’ என்ற படத்தில் நடித்தார். கவர்ச்சிகரமாக அமைந்திருந்த அவரது வேடம் பேசப்பட்டது.இதையடுத்து ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ‘மார்ஜவான்’ என்ற ரொமாண்டிக் ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது.