அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவரை 1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையை உருவாக்கியது. இதில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்களிடம் இருந்து ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை பெறப்பட்டது.
மக்களிடம் பெறப்பட்ட நன்கொடை குறித்து அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி நேற்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடையை வழங்கினர். 492 ஆண்டுகளுக்கு பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தை செய்து வருகின்றனர். இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு 1511 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.