ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் ராமர் கோயில் பூமி பூஜை, சீனா எல்லை பிரச்சனை, கொரோனா பரவல் ஆகியவை பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழல்கள் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், சீன அரசு உற்பத்தி செய்யும் பொருள்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாட்டில் நிலவும் சூழல்களைக் கருத்தில்கொண்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.