சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் .
சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் கொண்ட புகையிலை விளம்பர பலகைகள் வைத்துள்ள தனியார் புகையிலை நிறுவனத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ,ஆனால் அதனை மீறி விளம்பரங்கள் செய்ததால் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இளம் தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.