நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை என மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது . அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் .
இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது . அப்போது பேசிய அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில் ,மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி . மாநில அரசுகளின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை . மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக மத்திய அரசு இருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு வலிமையான இந்தியாவை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார்.