ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்டது.
திருச்சி, கும்பகோணம், காரைக்கால் மற்றும் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகம் போன்ற 20_கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதணையின் போது, செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்கள், 2 லட்சம் ரொக்கமும், பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .