அரசின் தடையை மீறி புகையிலை மற்றும் மது விற்ற குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யவும் மது விற்பனை செய்வதை தடுத்து வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்ததாக 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இது மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கட்டுக் கட்டான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.