Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கும் மழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு… மக்கள் அவதி..!!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெரியபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- ராமநாதபுரம் 82, பள்ளமோர்க்குளம் 22, மண்டபம் 66, ராமேசுவரம் 60.20, பாம்பன் 35.50, தங்கச்சிமடம் 26.40, தொண்டி 1.10 திருவாடானை 1, தீர்த்தாண்டதானம் 7, வட்டானம் 1.20, கடலாடி 32.80, முதுகுளத்தூர் 18, கமுதி 7.60, வாலிநோக்கம் 18.40, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம் ஆகிய இடங்களில் மழை பதிவாகவில்லை. 14 இடங்களில் மாவட்டத்தில் மழை பெய்த மொத்த அளவு 379.20 மில்லி மீட்டராகும். இதனடிப்படையில் 23.70 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெய்துள்ளது.

Categories

Tech |