Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடாமல் பெய்யும் மழை…. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்…. தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்….!!

தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன.

மேலும் தாமரைக்குளம் மற்றும் ரகுநாதபுரம் வழியாக செல்லும் சாலைகளில் இரண்டு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |