ராமநாதபுரம் வாலிநோக்கம் என்ற கடற்கரையில் எலும்புக்கூடுகள் அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போதெல்லாம் மக்கள் மூட நம்பிக்கையின் காரணமாக நரபலி என்ற பெயரில் போலி சாமியார்களின் பேச்சை கேட்டு மகள்கள், மகன், உறவினர்களை பலி கொடுக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோன்றுதான் ராமநாதபுரத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் என்ற கடற்கரையில் அதிகமான எலும்புகள் இருப்பதாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த காவல்துறையினர் கடற்கரையில் 5க்கும் மேற்பட்ட நபர்களின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். இதையடுத்து கடற்கரையில் ஏதேனும் நரபலி நடந்திருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.