Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

கூட்டுறவு வங்கிகளை தனியார் மையமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறி ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு எதிர்த்திட வேண்டும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக தமிழ்நாடு வங்கி என்று உருவாக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

Categories

Tech |