ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக திரட்டப்பட்ட காசோலைகளில் 15000 காசோலைகள் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நன்கொடை நாடு முழுவதும் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு திரட்டியுள்ளது. இன்னும் கட்டுமான பணிக்காக பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் திரட்டப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. அதன்படி திரும்பிவந்த காசோலைகளின் மதிப்பு ரூபாய் 22 கோடி ஆகும். இதற்கு காரணம் நன்கொடை அளித்தவர்கள் வங்கியில் கணக்கில் பணம் இல்லாததும் சில தொழில்நுட்பக் கோளாறுகளும்தான் என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தொடர்ந்து நன்கொடை வசூலிக்கபட்டு வரும் நிலையில் கோவிலின் கட்டுமானத்திற்காக இதுவரை ரூபாய் 5000 கோடி வசூலித்ததாக கோவிலின் அறக்கட்டளை கூறியுள்ளது. இந்நிலையில் வசூலிக்கப்பட்ட தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ராம ஜென்மபூமி அறக்கட்டளை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.