அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நேற்று வரை 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது. கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் கோவில் கட்டுவதற்கு வந்த நிதி விவரங்களை அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேத்திரி தெரிவிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நேற்றுவரை முப்பது கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. இன்று மேலும் பதினோரு கோடி ரூபாய் நிதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து ரூபாய் 17 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் அனுமதியை அறக்கட்டளை முழுமையாக தராததால் அந்த நீதியை நிறுத்தி வைத்துள்ளோம் அனுமதி பெற்றபின் பணத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றார்.