Categories
மாநில செய்திகள்

ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினர்…!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினர் இந்த விழாவில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதால் ராம ஜென்மபூமியில் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட முறையில் கோவில் கட்டுவதற்கு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில்  பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணி அளவில் ராமர் கோவிலுக்கானஅடிக்கலை நாட்டினர். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும், ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை நிருவாகிகள் பலர் பங்கேற்றனர். மிகவும் சிறப்பான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா, கௌரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

வாரணாசி, அயோத்தி, பேக்ரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 சுவாமிகளால்அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ராமஜென்ம பூமி வளாகத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான சடங்குகள்  . ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா காரணமாக அயோத்தி நகரம் விழாக் கோலம் பூண்டது. வண்ண விளக்குகளால் முக்கிய இடங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். அதோடு பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்ததால் , அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றி காவலர்கள் பாதுகாப்பில் ஈடுப்பட்டு இருந்தனர்.

Categories

Tech |