Categories
தேசிய செய்திகள்

ராமருக்கா ?….. பாபருக்கா ? அயோத்தி வழக்கில்….. இன்று தீர்ப்பு , பெரும் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு  பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் அலுவல் பட்டியலில் வழக்கு விவரம் வெளியாகியுள்ளது.

Image result for ayodhya supreme court

அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கும் சொந்தமானது என்பது தான் இந்த வழக்கின் சாராம்சம். ராமர் பிறந்த இடம் என்று கூறி நிலத்திற்கு இந்து அமைப்புகள் உரிமை கோருகின்றனர். ஆனால் சிவில் வழக்கின் ஆவணங்களே பிரதானம் என்பதால் அதன் அடிப்படையில் இடம் தங்களுக்கு சொந்தமானது என்பது  சன்னி வக்பு வாரியம் வாரியத்தின் வாதமாகும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் முன்னதாகவே தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் அமைதி காக்க சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Image result for ayodhya supreme court

சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ராம ஜென்மபூமி , நிர்மோகி அகோரா , சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் உரிமை கூறும் இந்த வழக்கில் முதல் தீர்ப்பு 2010 ஆம் ஆண்டு வெளியானது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டதால் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளன.

Categories

Tech |