தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ராம் சரணுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022