ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரும், நடிகர் ராம்சரனின் தந்தையுமான சிரஞ்சீவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.