ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பாடம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
அந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை பேசூ ஜி நடிப்பார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவைக்கப்பட்டுள்ளது. இப்படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.