இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர் ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததாலும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார்.
இதேபோல் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை இயக்க தயாரானார். ஆனால் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இப்படத்தை இயக்கி முடிக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை அடுத்து இயக்குனர் ஷங்கருக்கும் இந்தியர்கள் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஆகையால் ஷங்கர் இந்தியன்2 படத்தை இயக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகையால், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ஷங்கரின் படத்தில் நடிக்க ராம்சரண் தற்போது தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.