ராம்சரணின் [RRR] திரைப்படக்குழுவினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி தற்போது ரத்தம் ரணம் ரௌத்திரம் [RRR] என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் [RRR] படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண், ஆலியா பட், அஜய்தேவ்கன், என்டிஆர் ஆகியோர் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அனைவரும் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றும், கட்டாயம் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
https://www.instagram.com/tv/COhlWwgAvyj/?igshid=1o0r9ky4ay3nk