கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது.
அரியலூர் மாவட்டம் ஆலத்தூரில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் வாழப்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு லாரி கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியின் பின்பக்கத்தில் அதிக அளவில் புகை வெளியேற ஓட்டுநர் லாரியை உடனடியாக சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் லாரி முழுவதும் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த அவர்கள் தீயை அணைத்தனர். இதில் லாரி முழுவதும் எரிந்து சேதமானது.