Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானின் தோல்வி…. இந்தியாவிற்கு மகிழ்ச்சி…. சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வாரிய தலைவர்….!!

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் துபாயில் வைத்து நடைபெற்றது. இதில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 171 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 6 வது முறையாக ஆசிய கோப்பை வென்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து இந்திய பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, அவரது செல்போனை பறித்துக் கொண்ட ரமீஸ் ராஜா நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் தானா பாகிஸ்தான் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தம் தானே என சர்ச்சையாக பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |