கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வர மீனவர்களிடம் நீங்கள் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து போயிருங்கள் என்று எச்சரித்தனர்.
மீனவர்கள் தங்களின் படகுகளை கரைக்கு திருப்புவதற்கு முன்னரே கடுமையாக எச்சரித்தனர். உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டினர். உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என்று எண்ணிய மீனவர்கள் வேக வேகமாக கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படையின் இந்த காரியத்தால் எங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தினர்.